-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதி பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனித வள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள் திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவை பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள் ,மருத்துவ முகாம், பொது மருத்துவ பரிசோதனை, கண்புரை பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் சேவைகள் (வறியவர்களுக்கு) என்பன இடம்பெறுவுள்ளன.
இந்த நடமாடும் சேவையில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது


















