– சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் மயூரன் –
-த.சுபேஷன்-
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தென்மராட்சி பிரதேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றியவர் என சாவகச்சேரி பிரதேசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறோம். அவர் அடையாளம் தெரியாதவர்களால் கடந்த 2006 ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். உண்மையில், அவர் எங்களுடைய பிரதேசத்துக்காகவும் மற்றும் மக்களுக்காகவும் மிகவும் உன்னதமான சேவையை ஆற்றியவர்.
எங்களுடைய பிரதேசத்துக்காகவும், மக்கள் சார்பாகவும், தேசம் சார்பாகவும் பாராளுமன்றத்தில் பல விடயங்களைப் பேசியவர்.
தனது மரணம் வரை இலவச சட்ட சேவையை மக்களுக்கு ஆற்றியவர். அவர் படுகொலை செய்யப்பட்டு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


















