2009 இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த தொல்.திருமாவளவன் நேற்றுமாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தினார்.
திருமாவளவின் வருகை திடீர் வருகையாக இருந்தபோதும், பிரதேச மக்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன், அஞ்சலியிலும் பங்கேற்றிருந்தனர்.



















