-க.சபேஷன்-
யாழ்.சாவகச்சேரியில் கைதுசெய்ய சென்றிருந்த பொலிஸாரை வாளுடன் துரத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கைதான இளைஞன் வழங்கிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்ய சென்றபோது குறித்த இளைஞர் பொலிஸாரை வாளுடன் துரத்தியுள்ளனர்.
இந்நிலையில் வாளுடன் சந்தேகநபரை மடக்கிய பொலிஸார் சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. கைதான இரு இளைஞர்களிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


















