-பா.பிரதீபன்-
யாழ்.கொக்குவில் – கலட்டிப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்கள் 20,21,22 வயதானவர்கள் என கூறியுள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து சுமார் 50 போதை மாத்திரைகளை மீட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.


















