-செ.ரவிசாந்-
சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக நாதமணி மதுசூதனனின் ‘வேல்நாதம்’ நாதஸ்வரக் கச்சேரி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இசைக்கலைமணி நடேசு செல்வச்சந்திரன், வித்துவான் அ.கேதீஸ், வித்துவான் மகேந்திரம் பிரபா ஆகியோர் அணி செய் கலைஞர்களாகப் பங்கேற்கவுள்ளனர்.


















