-க.கனகராசா-
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பனல் போட்கள் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக இரு பனல் போட்கள் காணப்படுகிறது.
இதிலிருந்து நீர் வழங்குவதற்காக நேற்று திங்கட்கிழமை ஊழியர் சென்றபோது பம் வைக்கும் பனல் போட் இரண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளமையைக் கண்டு, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இரு பனல் போட்களும் சேதப்படுத்தப்பட்ட போதிலும் நீர் வழங்கல் இயந்திரத்தில் சேதம் ஏற்படாமையால் நீர் வழங்குவதில் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பம் பனல் போட்டில் இருந்து பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, கரவெட்டி பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















