-சொ.வர்ணன்-, -பா.பிரதீபன்-
பருத்தித்துறை கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்களுக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த 31 மீனவர்களும் அண்மையில் கடற்படையால் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் கடந்த 4 ஆம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் 14 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவானால் அவர்களுக்க ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


















