-பா.பிரதீபன்-
மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று மாவீரர் பெற்றோர்/உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்.
மாவீரர் பெற்றோர்/ உரித்துடையோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஓழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் இரு மாவீரர்களின் தந்தை ஒருவரால் சுடரேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கலந்து கொண்டு மாவீரர் பெற்றோர்/உரித்துடையோருக்கு மரக்கன்றுகளும் உலருணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.


















