-செ.ரவிசாந்-
யாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின் வடங்கள் (கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக் கூடும்.
இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சாரசபையினர் அறிவித்துள்ளனர்.
எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் 0212024444 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது யாழ்ப்பாணம் – 0212222609, கோண்டாவில்- 0212222498, சுன்னாகம் – 0212240301, வட்டுக்கோட்டை- 0212250855, சாவகச்சேரி – 0212270040, பருத்தித்துறை- 0212263257, வேலணை – 0212211525 ஆகிய பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.
மின் வடங்கள் அறுந்து விழுந்தால் மின்சார சபையினர் வருகை தந்து மின் இணைப்பைத் துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்லவிடாது காத்திருந்து சமூகநலன் பேணுமாறும் இலங்கை மின்சாரசபையினர் கேட்டுள்ளனர்.


















