மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டன.
தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி, கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள், இறைச்சிக் கடைகள், மீன்சந்தைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன.

















