-கஜிந்தன்-
சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்காக சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான நாகன் கிருஷ்ணமூர்த்தி எனும் மீனவர் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.


















