-க.கனகராசா-
வடமராட்சிப் பகுதியில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி துன்னாலை வேம்படி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் நிதீஸ்குமார் (வயது-31) என்பவரே வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சொத்துப் பிரச்சனை காரணமாக உறவினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


















