-பா.பிரதீபன்-
யாழில் அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் எச்சரிக்கை செய்துள்ளார்.
நேற்று நடத்தப்பட்ட திடீர் பரிசேடிhதனை நடவடிக்கையின் போது அரிசியினை விற்பனை நிலையத்தில் விற்பானைக்காக இருந்த போதும், அதனை விற்க மறுத்த விற்பனை நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நகர், கே.கே.எஸ். வீதி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கீரிச்சம்பா அரிசி கடையில் விற்பனைக்காகவிருந்தும், அதனை விற்பனைக்கு மறுத்த கடை உரிமையாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான திடீர் சுற்றிவளைப்புக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் தொடர்ந்து நடத்தப்படும். ஏனவே பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


















