-க.கனகராசா-
சர்வதேச மனக் கணிதப் போட்டி அண்மையில் ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்றது. இதில் யூசிமாஸ் யாழ்ப்பாணக் கிளையில் இருந்து 7 மாணவர்கள் சர்வதேச பங்குபற்றி சாதனை படைத்தனர்.
வேல்ரூபன் விகாஸ், ஆண்ட்ரூ ஜோன் ஜஸ்மியன், ரஜிதரன் ஆராதித் மற்றும் ஆதனா வசந்தபிரசாத் குமார ஆகியோர் முதலாம் இடத்தினையும், ஆர்வினா வசந்தபிரசாத் குமார மற்றும் ஆத்மிகா இதயபவன் ஆகியோர் இரண்டாம் இடத்தினையும், அமிர்தினி வித்தியாதரன் மூன்றாம் இடத்தினையும் பெற்று எமது மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பல்வேறுபட்ட நாடுகள் கலந்து கொண்ட இப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி இவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















