-புத்தூர் கடல்நீரேரியில் சம்பவம்-
-பா.பிரதீபன், சி.ஜெகதீஸ்வரன்-
யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்தார்.
ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்தார்.
கடல்நீரேரியில் நேற்று திங்கட்கிழமை மீன் முடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென சேற்றில் புதைந்து காணாமல் போனார்.
அதனை அவதானித்தவர்கள் கடல்நீரேரியில் இறங்கி இளைஞனை தேடிய நிலையில், நீண்ட போராட்டத்தின் பின் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

















