-க.சபேஷன், கஜிந்தன், செ.கபிலன், பா.பிரதீபன்-
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் மூத்த விநாயகர் கோயில் பகுதியில் 2 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
அதே போன்று சுன்னாகம் – உடுவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 5 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடாத்தப்படும் விசாரணைகள் முடிந்த பின்னர், அந்தந்த பகுதி நீதிமன்றங்களில் அவர்கள் சான்றுப் பொருட்களுடன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்.


















