தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் 69 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த 29 குடும்பங்களின் 83 பேர் கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையிலும், கெற்போலி மற்றும் கச்சாய் பிரதேசங்களைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் கச்சாய் ஆரம்ப வித்தியாலயத்திலும் என 108 பேர் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டனர்.
34 குடும்பங்களை சேர்ந்த 128 பேர் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொடிகாமம் மத்தியில் 10 வீடுகளும், நாவற்குழியில் ஒரு வீடுமாக 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


















