-க.கனகராசா-
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது 24 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகளுடன் சுற்றாடலை பேணிய 10 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை நகரசபையினர், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், பருத்தித்துறை பிரதேச செயலகத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து வீடுகள் தோறும் டெங்கு கட்டுப்பாட்டு களத்தரிசிப்பு மேற்கொண்டனர்.
இதன்போது 461 ஆதனங்கள் பரிசோதிக்கப்பட்டது. இதில் 146 இடங்கள் நுளம்பு பரவக்கூடிய சூழலாக இனம் காணப்பட்டதுடன் 24 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகளுடன் சுற்றாடலை பேணிய 10 குடியிருப்பாளர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


















