பருத்தித்துறை நகரசபையில் இன்று நடைபெற்ற மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரசபையின் அமர்வானது தவிசாளர் வின்சன் டீ.போல் டக்ளஸ் தலைமையில், இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
இந்த அமர்வில், 2026ஆம் ஆண்டுக்கான நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன், அண்மையில் தையிட்டியில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கும் அமர்வில் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


















