புத்தசாசன சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட பிரதீபா விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் தென்மராட்சி கலாசார மத்திய நிலையம் ஆரம்ப பிரிவு (குழு) கிராமிய பாடல் போட்டியில் முதலாம் இடத்தையும், கனிஷ்ட பிரிவு (குழு) கிராமிய பாடல் போட்டியில் முதலாம் இடத்தையும், தில்லானா நடனப் போட்டியில் முதலாம் இடத்தையும் பெற்று, சாதனை படைத்தது.
இவற்றுக்கான விருதுகளை சில மாணவர்களும் மத்திய நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரியரியர்களும் பெற்றுக்கொண்டனர்.


















