கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தால் துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவட்டு இன்று வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய நாளில் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது
யெ,யெமில் வரிகளிலும், மைக்கல் சார்ள்ஸ் இசையிலும், Jmic studio வின் ஒலிப்பதிவிலும், பாடகர்களாக யே.றெஜி, றா.விஜி, யோ.பிரியங்கா, செ.செபஸ்ரியன் ஆகியோரின் குரலிலும் பதிவாகி ‘துயர் சுமந்த கரைகள்’ இறுவட்டு வெளியிடப்பட்டது.
கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் இறுவட்டை வெளியிட, ஆழிப்பேரையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.


















