-ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ரகளை-
-கஜிந்தன்-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கான சுற்று நிருபம் தொடர்பான விவாதத்தின்போது இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கருத்து தெரிவிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குறுக்கிட்டார்.
இதன்போது ‘குட்டி நாயை’ போன்று குரைத்துக்கொண்டு இருக்கக் கூடாது என சிறீதரன் வழித்துப்பேசினார் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரனை பார்த்து எவ்வாறு குட்டி நாய், பெரிய நாய் என்று என கூறமுடியும்? என கேள்வி எழுப்பினார். படிப்பறிவு இருக்க வேண்டும். கைநாட்டு அரசியலை செய்யும் தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் தெரிவதில்லை என விமர்சித்தார்.
இதன்போது கடும் தொனியில் சிறீதரன் எம்.பி, உனக்கு படிப்பறிவு இருக்கிறதா? நாங்கள் கைநாட்டு என்றால் நீ என்ன கால்நாட்டா என கூறினார்.
இருவரின் ரகளைகளை பார்த்து அபிலித்திக் கூட்டத்துக்கு வந்திருந்த அதிகாரிகள் தமக்குள் சிரித்துக் கொண்டனர். இதன்போது இருவரின் அநாகரிக நடவடிக்கைகளை பார்த்து சலித்துப்போன கடற்றொழில் சஙகத்தின் பிரதிநிதி ஒருவர் உங்கள் சண்டைகளை வெளியில் வைத்தக்கொள்ளுங்கள் எங்களது பிரசினைகளுக்கு காடுகொடுங்கள் என தெரிவித்தார். ஆனால் இருவரும் கடைசிவரைஅபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை கேட்காது தங்களின் ரகளைகளிலேயே கவனம் செலுத்தினர். கூட்டத்தில் இரந்தவர்கள் இவர்களின் ரகளைகளை பார்த்து சின்னம் சிறுசுகள் போன்று சண்டைபோடுவதாக அலுத்துக்கொண்டனர்.


















