-முதல் போட்டி மார்ச்சில் நடத்த முடிவு-
யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை (JICS) மண்டைதீவில் கட்டும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி அப் பணிகள் முன்னேறி வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் (SLC) தெரிவித்தது.
தித்வா சூறாவளி காரணமாக மைதானத்தில் கட்டுமான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ளுடுஊ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதில் எதிர்வரும் ஜனவரி 14 அன்று நடைபெறவிருந்த முதல் சோதனை போட்டியும் இடைநிறுத்தப்பட்டிருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் வரவிருக்கும் 2026 ஐ.சி.சி ஆண்கள் ரி-20 உலகக் கிண்ண போட்டி முடிந்த பின் சோதனை ஆட்டம் நடத்தப்படும்.
திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் மைதானத்தின் கட்டுமானப் பணிகளை முடிப்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மொத்தம் 138 ஏக்கர் பரப்பளவில் ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்குவதற்கான இலங்கை கிரிக்கெட்டின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இந்த மைதானத்தின் கட்டுமானம் அமைந்துள்ளது என்றும் இலங்கை கிரிக்கெட் மேலும் குறிப்பிட்டுள்ளது.


















