-சொ.வர்ணன்-
யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025ம் ஆண்டின் இறுதி 6 மாதங்களில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் குறித்த பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 8 பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், 9 குடும்ப வன்முறைகளும் பதிவாகியுள்ளன.



















