-ரஜீவன் எம்.பி-
வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மக்களின் நலன் கருதி கேவில் வரை சேவையை நீடிக்க வேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் பணித்துள்ளார்
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கேவில் – நித்தியவெட்டை பிரதான வீதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
ஒருசில நாட்கள் கேவில் வரை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு பின்பு கட்டைக்காட்டுடன் நிறுத்திக் கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் ரஜீவன் எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது
அவ்வாறு ஒருசில நாட்கள் மட்டும் கேவில் வரை சேவையில் ஈடுபடுவது தவறு என்றும் தினமும் மக்களுக்கு சேவையை வழங்க வேண்டும் என்றும் குறித்த வீதி புனரமைப்பிற்கு பின்னர் மக்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


















