-சி.வி.கே. கடும் எச்சரிக்கை-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பான விடயங்களை கட்சி தானாகவே கையாளுமென்றும், இதில் அநுரகுமார தரப்பு ‘குத்திமுறிய’ வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழரசு கட்சியை மலினப்படுத்த நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் கனவு ஒருபோதும் பலிக்காது எனத் தெரிவித்த அவர், அரசியல் இலாபத்திற்காகத் தமது கட்சியை விமர்சிப்பதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


















