-சொ.வர்ணன்-
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியில்துறை பேராசிரியர் நா.பிரதீபராஜா ‘எம் மண்ணின் வானிலை வல்லோன்’ என்னும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நல்லூரிலுள்ள ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர் சுகிர்தராஜன் மற்றும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபனும் கருத்துரைகளை வழங்கினார்.
இதையடுத்து இடம்பெற்ற சிறப்பு பட்டம் வழங்கும் நிகழ்வாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவுக்கு ‘எம் மண்ணின் வானிலை வல்லோன்’ என்னும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொன் பாலசுந்தரம் பிள்ளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் , வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


















