யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர் நா.சண்முகலிங்கம், பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராசா, பதிவாளர் காண்டீபன், பல்கலைக்கழக சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு துணைவேந்தருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


















