மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று காலை தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்டது.
தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சாவகச்சேரி நகரத்தில் நகரசபைத் தவிசாளர் தலைவர் வ.ஶ்ரீபிரகாஸும், கொடிகாமம் பிரதேசத்தில் பிரதேச சபை தவிசாளர் குகதாசனும் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது சாவகச்சேரி வணிகர் கழகத்தினர், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், சந்தை வியாபாரிகள் சங்கத்தினர்இ பொதுமக்கள் எனப்பலரும் கையெழுத்துப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.






















