யாழ். அரியாலை – செம்மணிப் புதைகுழி வழக்கை மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ். மாவட்ட நீதிவான், நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கில் கிட்டத்தட்ட 50 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ். நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் இந்த இடமாற்றத்தால் இது தொடர்பான வழக்குகளை இனிவரும் நாட்களில் கையாள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக துறைசார் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.


















