வவுனியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று புதன்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா மதவுவைத்தகுளத்தில் 293மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்தியநிலையம் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த நிலையத்தில் மீண்டும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருளாதார மத்தியநிலையத்தில் 50கடைகள் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 35 கடைகள் வவுனியா மொத்த வியாபார சந்தை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கடை சதொச நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















