யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், ஒய்வுபெற்ற சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான ரட்ணம் சேர் 72 வயதில் நேற்று இரவு 9மணிக்கு இறைபதம் அடைந்தார்.
இவர் கலைப்பீட மாணவர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர், இவரது அணுகுமுறை தனிச்சிறப்புக்குரியது, ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதையே முதன்மையாக கொண்டு இவரது முடிவெடுத்தல்கள் அமையும் மற்றும் நகைச்சுவை கலந்த கற்பித்தல் முறை மாணவர்களை இலகுவில் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் இறப்பு யாழ். பல்கலை மாணவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.


















