-இ.கலைஅமுதன்-
யாழ்.பல்கலைக்கழக நீர் ஆய்வுத்திட்ட செயற்றிட்டத்தின் ஓர் அம்சமாக வழுக்கையாற்றின் எதிர்காலம் பற்றிய கருத்தரங்கொன்று நாளை சனிக்கிழமை சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள எம்.எம். மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வழுக்கையாறு கடந்து செல்லும் பிரதேசத்தின் நான்கு முக்கிய பிரதேச சபைகளும் அவற்றின் மக்கள் பிரதிநிதிகளுக்குமாக இக் கருத்தமர்வு நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கின் இறுதியில் இடம்பெறவுள்ள சிறப்புக் கண்காட்சியில் வழுக்கையாற்றின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் மாதிரி ஒன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையான நேரத்தில் பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்நிலையில்,வழுக்கையாற்றின் விபரங்களைத் தெளிவு பெறுவதற்கு ஆர்வமுள்ள நீரார்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















