-செ.ரவிசாந்-
ஏழாலையில் ஜே-206 மற்றும் ஜே-203 கிராம கிராம அலுவலர் பிரிவுகளில் வெள்ளத்தால் சுமார் நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
அதாவது ஜே-206 கிராம அலுவலர் பிரிவில் 65 குடும்பங்களும், ஜே-203 கிராம அலுவலர் பிரிவில் 35 குடும்பங்களுமே பாதிக்கப்பட்டன.
சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையினால் ஏழாலை ஏழுகோவில்குளம் பெருக்கெடுத்ததையடுத்தே வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், வெள்ளம் பெரும்பாலானவர்களின் வீடுகளுக்குள் புகுந்தமையால் பல குடும்பங்கள்
இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அடைமழை பெய்யும் காலங்களில் தாம் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டு வருவதாக இரு கிராம அலுவலர் பகுதிகளிலும் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர்.
கடந்த வருடத்திலும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்ததாகவும் இம்முறை தாம் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்;. அத்துடன் தமக்கான போதிய நிவாரணங்கள் இதுவரை கிடைக்கவில்லையென்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டனர்.


















