-க.கனகராசா-
மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்தவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் மூவாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள மீன்சந்தையில் மீன்வியாபாரம் செய்யும் போது, வெற்றிலை மென்று, பொதுவிடத்தில் எச்சில் உமிழ்ந்தவருக்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்தான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வெற்றிலையை மென்று எச்சில் உமிழ்ந்தவருக்கு 3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

















