-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரணப் பொதிகளுடன் கூடிய அமரிக்க விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை தரையிறங்கியது.
நேற்றுமுன்தினம் கொழும்பை வந்தடைந்த இந்த விமானம் வடக்கு மாகாணத்துக்கான நிவாரணப்பொதிகளை இறக்குவதற்காக நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் விநியோகிப்பதற்காக குறித்த நிவாரணப் பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் இலங்கை விமானப்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இதனொரு கட்டமாக யாழ். மாவட்டத்திற்கான நிவாரணப் பொதிகள் நேற்று மதியம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் விமானப் படை அதிகாரிகளால் கையளிக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்துக்கென 192 பிறீமா நூடில்ஸ் பெட்டிகளும் 150 கோதுமை மா மூடைகளும் கையளிக்கப்பட்டது.


















