-த.சுபேசன்-
சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் சேவைகள் கொடிகாமம் பிரதேசம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே மேற்படி விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம், கெற்பேலி, மிருசுவில், விடத்தற்பளை மற்றும் வரணி போன்ற பகுதிகளில் அதிகளவிலான கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளதாலும், கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை சாவகச்சேரி நகரை மையப்படுத்தி அமைந்திருப்பதாலும் கால்நடை வளர்ப்பாளர்களின் நலன் கருதி கொடிகாமம் பிரதேசத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட சேவை வாராந்தம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொடிகாமத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















