-ஞானத்தமிழ்-
மாதகல் சென். தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையின் கல்விக் கண்காட்சி நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி றமணி ஜெயந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் சண்டிலிப்பாய் பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி.அரசகேசரி பிரதம விருந்தினராகவும் மாதகல் பங்குத்தந்தை வணபிதா ஏ.ஏ.அமல்ராஜ் அடிகளார் சிறப்பு விருந்தினராகவும் மாதகல் நலன்புரி சங்கச் செயலாளரும் தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஆர்.ஜெகதீஸ்வரன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















