-சி.ஜெகதீஸ்வரன்-
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் சட்டவிரோத செயற்பாடுகளை தமது பகுதியில் முற்றாக அழித்தொழிப்பது என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை கழகத்தின் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் கசிப்பு குடிப்பதற்காக பலர் கூடியிருந்த காட்டுப்பகுதி திடீரென அவர்களால் முற்றுகையிடப்பட்டது.
இந்த முற்றுகையின் போது கசிப்பு பரலை கைவிட்டு அங்கு கூடியிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் கசிப்புபரல் விளையாட்டுக் கழகத்தால் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவரும் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினருமான பி.அலஸ்ரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது
தமது எல்லைக்குள் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும் மீறினால் நாம் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்போமென சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


















